கொரோனா தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு தீவிரமாக இருக்காது என்பதால் தொடக்கப்பள்ளிகளை திறக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 25 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில், 93 ஆயிரத்து 82 பேர் 12 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது மொத்த பாதிப்பில் 3.6 விழுக்காடு மட்டுமே குழந்தைகள் ஆவர். கொரோனா வைரஸ் உடலில் ஒட்டிக் கொள்வதற்கான ACE ரிசப்டார் எனப்படும் செல்கள் குழந்தைகள் உடலில் முழுமையாக வளராமல் இருக்கும் என்பதால், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் தீவிர பாதிப்பு ஏற்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிகளை திறக்கும் முன் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று மருத்துவர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.
18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தற்போது முன்னுரிமை கிடையாது என்றும், பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாமல் வெற்றிகரமாக பள்ளிகளை நடத்தி வருவதாகவும் உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌம்யா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE