இதன் பணி நுரையீரலை சுருங்கி விரியவைத்து மூச்சை இழுத்துவிட உதவுவது ஆகும். இதன்
செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும்போது விக்கல் வருகிறது.
சுவாசத்தின் போது உதரவிதானம்
கீழ்நோக்கி விரிந்து தட்டையாகிறது. கூடவே குரல்வளை நாண்களும் திறக்கின்றன. இதனால் நுரையீரலில் காற்றை நிரப்ப அதிகம் கிடைக்கும்.
உதரவிதானம் விரியும்போது குரல்வளை நாண்கள் திறப்பதால் நாம் உள் இழுக்கும் காற்று குரல்வளை நுரையீரலுக்குள் எளிதாக
செல்ல முடிகிறது
மூச்சை வெளிவிடும்போது
உதரவிதானம் மீண்டும் பழைய நிலைக்கு சுருங்கும். இதனால் காற்று வெளியேறுகிறது. நம் மூளை பெரினிக்ஸ் என்ற நரம்பின் வழியாக
இந்த உதரவிதானத்தை இயக்குகிறது.
சில சமயங்களில் பெரினிக்ஸ் நரம்பில் ஏற்படும் எரிச்சலால் உதரவிதானம் முறையின்றி
மூளையின் கட்டுப்பாட்டில் இல்லாமல்
தன்னிச்சையாக இயங்கும். எனவே குரல்வளை நாண்கள் திறப்பதும் மூடுவதும் சரிவர நடக்காது.
இதனால் தொண்டை வழியாக
அதிக காற்றை உள் இழுக்கும்போது அது மூடிய அல்லது குரல் வளை நாண்களின் குறுகிய இடைவெளி வழியே செல்லும். காற்று
குரல்வளை நாண்கள் மீது மோதுவதால் ஹிக் என்ற சத்ததுடன் நமக்கு விக்கல் வருகிறது.
உதரவிதானத்தின் ஒழுங்கற்ற செயல்பாட்டிற்கு காரணங்கள் சில உண்டு. சாப்பாட்டை வேக வேகமாக சாப்பிடும்போது வயிறு
விரிவடைவதால் கூட உதரவிதானத்தின் செயல்பாடு பாதிக்கப்படலாம்.
அதிக சூடான காரமான உணவு சாப்பிடுதல், மது, புகை,
தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது கூட உதரவிதானத்தின் ஒழுங்கற்ற செயல்பாட்டிற்கு
காரணமாக அமைந்து விக்கல் வருகிறது..
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE