தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கடந்த வாரம் 137 மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பெருநிறுவனங்கள் பங்களிக்கும் சமூக பொறுப்பு நிதியை கொண்டு, தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த திட்டத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் தொடங்கி வைக்கிறார். அதைதொடர்ந்து, இந்த திட்டம் மாவட்டங்களில் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.
அதேசமயம், தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையின் கீழ், தடுப்பூசி போடும் தற்போதைய நடைமுறையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி ஒரு டோஸ் 780 ரூபாய்க்கும், கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் 1410 ரூபாய்க்கும் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE