Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

13 July 2021

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த தகவல்கள் இடம்பெற முயற்சி எடுக்கப்படும்.

பட்டிமன்ற பேச்சாளர் லியோனியை, பாடநுால் கழக தலைவராக, முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது, பெண்கள் குறித்து லியோனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால், அவரது நியமனத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பாடநுால் கழக தலைவராக லியோனி நேற்று பதவியேற்றார். பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், நேரில் வாழ்த்து தெரிவித்தார். லியோனியின் மனைவி, மகனும் உடன் இருந்தனர். நேற்று காலை 11:00 மணிக்கு பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. திடீரென காலை 9:30 மணிக்கே வந்து பதவியேற்றார்.

இதுகுறித்து விசாரித்த போது, நேற்று காலை, 10:30 முதல் 12:00 மணி வரை எமகண்டம். அதனால், 11:00 மணிக்கு பதவியேற்காமல், காலை 9:15 மணி முதல் 10:15 வரை நல்ல நேரம் என்பதால், அந்த நேரத்தில் பதவியேற்றதாக கூறப்பட்டது.கருணாநிதி பெயர்!பதவியேற்ற பின், லியோனி அளித்த பேட்டி:

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவது, முதல்வரின் மிகப்பெரிய தொலைநோக்கு பார்வை. அதற்கு உதவும் வகையில் செயல்படுவேன். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப் புத்தகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த தகவல்கள் இடம்பெற முயற்சி எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES