Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

09 July 2021

அடுத்து வருகிறது லாம்ப்டா கொரோனா வைரஸ்

அடுத்த தலைவலி..புதிய உருமாறிய லாம்ப்டா கொரோனா.. டெல்டா வகையைவிட கொடூரமான பாதிப்பு

 கோலா லம்பூர்: இந்தியாவில் மிக மோசான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகையைவிடப் புதிதாகக் கண்டறியப்பட்ட லாம்ப்டா கொரோனா மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக மலேசியா சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. உலக வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன

ஒரு நாட்டில் கொரோனா உச்சமடைந்து, பின்னர் குறைகிறது. அத்துடன் வைரஸ் பாதிப்பு முடிந்துவிட்டதாகக் கருதும்போது மீண்டும் அடுத்த அலை தாக்குகிறது. இப்படி அலை அலையாகத் தாக்குவதால் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. உருமாறிய கொரோனா இப்படி அலை அலையாக வைரஸ் பாதிப்பு ஏற்பட கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதே முக்கிய காரணமாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை டெல்டா கொரோனாவால் ஏற்பட்டது. இந்த டெல்டா கொரோனா தான் உலகின் பல நாடுகளில் அடுத்த அலையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இப்படித் தொடர்ந்து கொரோனா உருமாறுவது சிக்கலை அதிகரித்துள்ளது. 

லாம்ப்டா கொரோனா இந்நிலையில், தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

லாம்ப்டா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனைக் கவனிக்கப்பட வேண்டிய கொரோனா என்றும் உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

அடுத்த மாதம் ஏற்படலாம்.. SBI வல்லுநர் குழு எச்சரிக்கை மிக மோசமான பாதிப்பு இந்தச் சூழலில் இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகையைவிட லாம்ப்டா கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக மலேசியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. லாம்ப்டா கொரோனாவால் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிப்பதாகவும் மலேசியா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 இது கொரோனா அடுத்த அலையை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

அதிக பாதிப்பு பெரு நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் உறுதி செய்யப்பட்
ட கொரோனா பாதிப்புகளில் 82% லாம்ப்டா கொரோனா வகையால் ஏற்பட்டவை. மற்றொரு தென் அமெரிக்க நாடான சிலியில் 31% பேருக்கு லாம்ப்டா கொரோனா ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் இப்போது ஆறு பேருக்கு மட்டுமே லாம்ப்டா கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது எந்தளவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும், தடுப்பூசிகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.







No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES