தமிழ்நாட்டுக்குள் மக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்தை அதிகமாக நாடுகின்றனர். இந்நிலையில் கப்பல் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் 7,500 கி.மீ கடலோர பகுதியில், படகு போக்குவரத்தை மேம்படுத்தும் முன்னணி திட்டமாக, சாகர்மாலா திட்டம் உள்ளது. இதில் ஓர் அம்சமாக, பல வழித்தடங்களில் ‘ரோ-ரோ, ரோ-பேக்ஸ்’ என்ற சரக்கு மற்றும் பயணியர் கப்பல் சேவைகளுக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலுார், நாகை, காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து அறிமுகமாக உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. சென்னை துறைமுகத்தில் ரோரோ, ரோபேக்ஸ் என்ற கப்பல் சேவை, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இதில், கார்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதில், பயணிகளும் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட பின், ஆப்பரேட்டர்கள் விரைந்து வரும் பட்சத்தில், இந்த வசதி அடுத்த ஐந்து மாதத்தில் தொடங்கும். இதனால் சென்னையில் இருந்து கப்பலில் சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE