பெய்ஜிங் : கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து புதிதாக ஒரு வைரஸ் கிளம்பியுள்ளது. 'குரங்கு பி' வைரஸ் (Monkey B Virus) தாக்கி சீனாவில் ஒருவர் பலியாகியுள்ளார். சீனாவின் தலைநகர் பீஜிங்கை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர்(53), கால்நடை, மனிதரல்லாத விலங்குகளை ஆராய்ச்சி
செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திடீரென ஏற்பட்ட
குமட்டல் மற்றும் வாந்தியின் அறிகுறியால்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்கு பின்னர் அவர் கடந்த மே 27ம் தேதியன்று இறந்தார். ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய மருத்துவர் என்பதால், அவரது மரணம் குறித்து தீவிரமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இவ்விவகாரம் குறித்து சீன மையத்தின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கையை, குளோபல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அதில், ‘மார்ச் மாத தொடக்கத்தில் இறந்த இரண்டு குரங்குகளை,ஆராய்ச்சி நிறுவன மருத்துவர் ஆய்வுக்கு உட்படுத்தினார். அதன்பின், அடுத்த சில வாரங்களில் அவருக்கு தொற்று அறிகுறி தெரியவந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார்.
இறந்த மருத்துவரின் செரிப்ரோஸ்பைனல் திரவத்தை சோதித்த போது, அவருக்கு குரங்கு ‘பி’ பாசிடிவ் தொற்று இருப்பது உறுதியானது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதித்ததில், அவர்களுக்கு நெகடிவ் ரிசல்ட் வந்துள்ளது.
சீனாவில் குரங்கால் ஏற்பட்ட முதல் மனித நோய்த்தொற்று இதுவாகும்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
.மக்காக்களில் ஆல்பாஹெர்பெஸ்வைரஸ் என்ஸூடிக் குரங்கு வைரஸ் ஆரம்பத்தில் 1932ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, குரங்கு வைரஸ் மனிதர்களுக்கு பரவும்போது மத்திய நரம்பு மண்டலத்தை செயலிழக்க வைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE