தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் அறிக்கை:கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பள்ளிகளில் கற்றல்-, கற்பித்தல் பணிகள் முடங்கி உள்ளன. கல்வி, 'டிவி' மற்றும் 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டுமே நடக்கின்றன. மாணவர்களுக்கு, இந்த ஒரு வழி பயிற்சி முழுமையாக பயன் தராது.தற்போதைய நிலையில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, படிப்பில் நாட்டம் குறைந்துள்ளது.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், எழுத்துகளையே மறந்து போகும் நிலை உள்ளது.தற்போது, கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால், மாணவர்களின் நலன் கருதி, நேரடி கற்றல், கற்பித்தல் பணிகளை துவங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Source
- www.dinamalar.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE