தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தை திருத்தி அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி திருத்தியமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செயல்படுவார். உயர்கல்வி மன்றத்தின் துணை தலைவராக பேராசிரியர் அ.ராமசாமியும், உறுப்பினர் செயலராக பேராசிரியர் கிருஷ்ணசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பணிவழி உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மாண்புமிகு ஆளுநரின் செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
🔖டியர் அட்மின்ஸ் , இந்த 9444 555 775 எண்ணை உங்கள் குழுவில் இணைத்து கல்விசார் தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். நன்றி
JOIN
"Kindly share to all"
அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகளை kalvitamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் ,உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்....
Teachers can send their Materials Whatsapp – 9444555775
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE