10 கல்விஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட்டில் தங்களுக்கான பணிநிரந்தரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற நம்பிக்கையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போதே பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக திமுக சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
தேர்தல் அறிக்கையிலும் சேர்த்து வாக்குறுதி அளிக்கப்பட்டது.
எனவே தங்களது கோரிக்கையை இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றித்தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது:-
முதல்வர், கல்விஅமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிகழ்ச்சிக்கு வருகை புரியும்போது கோரிக்கை மனு கொடுத்து தொடர்ந்து வலியுறுத்தியே வருகிறோம்.
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களும் எங்களை நிரந்தரம் செய்ய சொல்லி அரசுக்கு பரிந்துரை செய்து வருகிறார்கள்.
பட்ஜெட்டிலேயே முதல்வர் எங்களை நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும்.
2012 ஆம் ஆண்டு நியமித்த 16549 பேரில், இப்போதுள்ள 12ஆயிரம் பேருக்காக, வாழ்வாதாரம் வேண்டி, திமுக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
மீண்டும் பழைய பென்ஷனை செயல்படுத்தும் முன்பாக, எங்களை தமிழகஅரசு பணிக்கு மாற்ற வேண்டும் என்றார்.
தொடர்புக்கு :-
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE