ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின்படி, வங்கி கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். இந்திரங்களில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 முறை கட்டணமின்றி பரிவர்த்தனை செய்யலாம். மேலும், பிற வங்கிகளின் ஏ.டி.எம்.களிலிருந்து வாடிக்கையாளர்கள் இலவச பரிவர்த்தனைகளை கோரலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 5 முறைக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பண பரிவர்தனைக்குமான கட்டணம் 15 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பண பரிவர்த்தனை அல்லாத பிற சேவைக்கு ஏ.டி.எம். இந்திரத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம் 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகின்ற 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதர வங்கிகளின் ஏ.டி.எம். இந்திரங்களில் மாதத்திற்கு 3 முறை கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம்.
அதற்கு மேல் செய்யப்படும் பண பரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நடைமுறை மட்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏ.டி.எம். வரிசைப்படுத்தல் செலவு மற்றும் வங்கிகளுக்கு ஏற்படும் ஏ.டி.எம்.பராமரிப்பிற்கான செலவுகள் காரணமாக இந்த கட்டணங்கள் உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய வங்கி கூறியுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE