அவரது செய்திகுறிப்பு:குழந்கைளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர) நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 54 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மற்றும் 85 மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் உள்ளன. சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும்.
இதில், எல்.கே.ஜி., வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டிலான மாணவர்கள் சேர்க்கைக்கு வரும் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை பள்ளிக் கல்வித் துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் குழந்தைகளின் விண்ணப்பங்களை பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், சிறப்பு பிரிவினர்களான ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், எச்.ஐ.வி., பாதித்த குழந்தை, துப்புரவு தொழிலாளிகளின் குழந்தை போன்றவர்கள் உரிய அலுவலர்களால் வழங்கப்பட்ட சான்றினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source
- www.dinamalar.com

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE