12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், துணைத்தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் பங்கேற்க இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக), கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து பாடத்தேர்வுகளையும் எழுதுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட பாடத்தேர்வுகளை எழுதுவதற்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு மே மாதம் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும், துணைத் தேர்வு எழுத சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும், 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் மூலம் ஜூலை 28ஆம் தேதி ஆன்லைனில் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதற்கு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. துணைத்தேர்வுகள் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளில் கணக்கிடப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று (ஜூலை-22) காலை 11 மணி முதல் மதிப்பெண்கள் பட்டியலை இணையதளங்களில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக்கூறி அதற்கான இணையதள பக்கத்தை ( http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ) பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.
இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்று கருதும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தேர்வெழுதலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்டத்தக்கது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE