Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

04 July 2021

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட கணிப்பு:இலங்கையின் மீது நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சேலம், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

சென்னையில் சில பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்யும்.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கடலோரம் அல்லாத உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.மன்னார் வளைகுடா பகுதிகளில், இன்று மணிக்கு 45 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 7 ம் தேதி வரை, மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES