சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, 2021-22-ம் கல்வியாண்டில் இருந்து பல்கலைக்கழக துறைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், இணைப்பு மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் எம்.பில். பட்டப்படிப்பு நிறுத்தப்பட வேண்டும்.
அதன்படி, 2021-22-ம் கல்வியாண்டில் இருந்து இந்த பட்டப்படிப்புகளில் எந்த மாணவர் சேர்க்கையும் நடத்த அனுமதி இல்லை. இதற்கு முந்தைய கல்வியாண்டுகளில் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் தங்களுடைய படிப்பை முடித்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மேற்கண்ட தகவல் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source
- www.dailythanthi.co
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE