தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மாணவர்களிடம் கல்வி தொலைக்காட்சியைப் பார்க்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாணவர்களும், பெற்றோர்களும் கல்வி தொலைக்காட்சியைப் பார்க்க வலியுறுத்தி தலைமை ஆசிரியர் ஒருவர் தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் வீதி, வீதியாக தண்டோரா போட்டு கல்வி தொலைக்காட்சியை பார்க்க வலியுறுத்தியது பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Source-
www.maalaimalar.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE