ஐரோப்பாவில் புதிய, 'தடுப்பூசி பாஸ்போர்ட்' நடைமுறை நாளை அமலுக்கு வர உள்ளது. இதன்படி, பாஸ்போர்ட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான, 'கிரீன் பாஸ்' சான்று இருந்தால் மட்டுமே ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த திட்டத்தில் இந்தியாவின், 'கோவிஷீல்டு' தடுப்பூசியை இணைக்கக் கோரி விண்ணப்பித்து உள்ளதாக, தயாரிப்பு நிறுவனமான, சீரம் தெரிவித்திருந்தது. ஆனால், 'அத்தகைய விண்ணப்பம் எதுவும் வரவில்லை' என, ஐரோப்பிய மருந்துகள் முகமை தெரிவித்துள்ளது. இதனால் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE