அவரது அறிக்கை:கடந்த சில நாட்களாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது, ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான புகார்கள் எழுந்து வருகின்றன. கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, பள்ளி மாணவியரிடம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம் அரங்கேறி உள்ளது.
பாலியல் வன்கொடுமையில் இருந்து, மாணவியரை பாதுகாக்க, ஆன்லைன் வகுப்புகளை, பெண் ஆசிரியைகளே எடுக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதன் வழியே, மாணவியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுவதை, முற்றிலும் தடுக்க முடியும்.அதேபோல், தனியார் பள்ளிகள் பலவற்றில், 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவியர், குட்டை பாவாடை, சட்டையை சீருடையாக வைத்துள்ளன. இவை மாணவியருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன.
எனவே, தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் மாணவியர், குட்டை பாவாடை சட்டைக்கு பதிலாக, சுடிதாரை சீருடையாக அணிவதை, தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE