தமிழகத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, அவர்களை பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு குழந்தைகளின் பெயரிலும் தலா ரூ. 5 லட்சம் வைப்பீடு தொகை வழங்கப்படும்.
18 வயதுக்கு பிறகு அந்த தொகையை வட்டியுடன் பெற்றுக்கொள்ளுதல், பெற்றோரில் ஒருவரை இழந்த நிலையில், குழந்தையுடன் இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு ரூ.3 லட்சம் நிவாரணம், உறவினர், பாதுகாவலர் ஆதரவில் வளரும் குழந்தைகள் பராமரிப்புக்கென மாதம் ரூ. 3 ஆயிரம், பட்டபடிப்பு வரை இலவச கல்வி போன்ற ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் கரோனா வால் உயிரிழந்த பெற்றோர், அவர்களின் குழந்தைகள், குடும்ப விவரங் களை மாவட்ட நிர்வாகங்கள் சேகரிக்கின்றன. மதுரை மாவட்டத் திலும் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இம்மாவட்டத்தில் சுகாதாரத் துறை அளித்த தகவல்களின்படி, கடந்த மார்ச் முதல் தற்போது வரை கரோனாவால் உயிரிழந்த பெற்றோர் 60க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் குடும்பங்களில் 18 வயதுக்கு கீழ் இருக்கும் சிறுவர், சிறுமியர், குழந்தைகளின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனியார் மருத்துவமனைகளில் கரோனா பாதித்து, அனுமதிக்கப்பட்டு பிறகு வசதியின்மையால் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், பரிசோதனையில் பாதிப்பு இல்லை என, தெரிந்து பிறகு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களில் சிலரது பெயர் இல்லை என்றும், உண்மையிலேயே கரோனா பாதித்து உயிரிழந்து இருக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பத் தினருக்கும் இத்திட்டம் பயன்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டோர் கோரியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிலர் கூறுகையில், ‘‘கரோனாவால் உயிரிழந்த பெற்றோர் வறுக்கோட்டுக்கு கீழ் இருக்கவேண்டும். அதற்கான பட்டியலில் (பிபிஎல்) குறியீட்டு எண்ணுடன் பெயர் இடம் பெற்றிருக்கவேண்டும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப் பட்டாலும், சுமார் 10 பேருக்கு மட்டுமே தகுதி இருப்பதாக கருதப்படுகிறது.
கரோனாவால் உயிரிழந்த சிலர் வறுமைக்கோடு பட்டியலில் இடம் பெறாத சூழல் இருக்கிறது. கரோனாவால் பாதித்து தனியார் மருத்துவமனையில் இறந்திருந்தாலும் சிலர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளனர்.
வறுமைக்கோடு பட்டியல் என்றில்லாமல், கரோனா தொற்று பாதித்தவர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுககவேண்டும், ’’ என்றனர்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE