சென்னை சைதாப்பேட்டையில், பருவ மழைக்கு முன்பாக கழிவு நீர் கட்டமைப்புகளை துார் வாரி பராமரிக்கும் பணிகளை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.பின் அவர் கூறியதாவது:கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இருந்தாலும், மக்கள் முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றினால், மூன்றாவது அலை நம்மை பாதிக்காது.தடுப்பூசி போடும் பணி விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
18 முதல் 44 வயதுடையவர்களுக்கான 14 லட்சம் தடுப்பூசிகள், இம்மாத இறுதிக்குள் வர உள்ளன.கூடுதலாக, நான்கு லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு தொகுப்பில் இருந்து தர உள்ளனர். மேலும், அடுத்த மாதம் மத்திய அரசு 71 லட்சம் தடுப்பூசிகளை தர உள்ளது. செங்கல்பட்டு மற்றும்குன்னுார் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில், கொரோனா தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். 'நீட்' தேர்வுக்கு எதிரான கருத்துகளை, பாதிக்கப்பட்டவர்கள் ஏ.கே.ராஜன் குழுவிற்கு தெரிவிக்கலாம். நீட் தேர்வு ரத்து தொடர்பாக சந்தேகம்வேண்டாம். முதல்வர் ஸ்டாலின், கண்டிப்பாக விலக்கு பெற்றுத் தருவார்.இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE