தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
“கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டது. அதன்படியே நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டும் அதுவும் இரண்டு தவணைகளாக அந்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அதன் நிலை ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வுக்கு பிறகு அந்த பள்ளிகளில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். பள்ளிகளில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டை எழும் பொழுது அதற்கான காவல்துறை வழக்கு செய்யப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாரும் தப்பிக்க முடியாது என முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுதும் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களா என ஆய்வு செய்யப்படுகிறது. பள்ளிகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் ஊரடங்கு தொடர்பான முழுமையான தளர்வுகள் அளித்த பிறகு பள்ளிகள் தொடங்கலாம் என உத்தரவிட்டால் அதற்காக தயார் நிலையில் உள்ளோம். மேலும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நாளை முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து பின் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
source www.dailythanthi.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE