Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

24 June 2021

பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு பதிலாக ஆணையர் நியமனம் எதிர்த்த வழக்கு ஐகோர்ட் தள்ளுபடி

அரியலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கருணாகரன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரியை அப்பதவியில் நியமித்து, பள்ளி நிர்வாகங்கள் கண்காணிக்கப்பட்டன.

 ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை செயலாளர் உள்ள நிலையில் எந்தவித சிறப்பு தகுதியும் அனுபவமும் இல்லாத ஆணையர் பதவி என்பது தேவையில்லாதது. எனவே, பள்ளிக்கல்வி துறை இயக்குனரின் அதிகாரங்களை ஆணையருக்கு வழங்கி கடந்த மே 14ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தவறு. ஆணையருக்கு பதிலாக கல்வித் துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குனராக நியமிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2014ம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு முன் பள்ளிக் கல்வி துறை ஆணையராக மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பதவி வகித்துள்ளனர் என்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிகாரிகள் நியமனம் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்டது. நியமனத்தில் சட்டவிரோதம் இருந்தால் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட முடியும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.








No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES