பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வழி வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில், பள்ளி கல்வி கமிஷனர் தலைமையில், விதிகள் தயாரிப்பு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தயாரித்துள்ள விதிமுறைகளுக்கு, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டன.
விதிமுறைகள் என்ன?
அனைத்து பாட திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளுக்கும், அரசின் விதிமுறைகள் பொருந்தும். பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும். இக்குழுவில், தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தலா இருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் பள்ளி சாரா வெளிநபர் ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பர்.
குறைகளை தெரிவிக்க, மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு மையமும், தொலைபேசி மற்றும் இ- - மெயில் வசதியும், ஒரு மாதத்தில் துவங்கப்படும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு, தங்களுக்கு வரும் புகாரை மாநில கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த மையத்தில் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் ரகசியமாக இருக்கும்.
ஆன்லைன் வழி வகுப்பில், ஆசிரியர்கள், மாணவர்கள் வகுப்பறை சூழலுக்கு ஏற்ப கண்ணியமாக உடை அணிய வேண்டும்.
ஆன்லைன் வகுப்பு நிகழ்வை முழுமையாக பதிவு செய்து, ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டி அமைக்கப்படும்.
மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு, மாணவர்களிடம் பெற்ற கருத்துக்களை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களை பதிவு செய்ய பதிவேடு பராமரிக்கப்படும். நவம்பர், 15 முதல், 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலை தடுக்கும் வாரம் கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* அனைத்து கல்வி வாரியங்களை சேர்ந்த பள்ளிகளுக்கும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்.
* ஒவ்வொரு பள்ளியிலும், ‘மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு’ அமைக்கப்படும். இந்த குழுவில் பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் இருவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியர் அல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கு ஏற்ப பள்ளிசாரா வெளிநபர் ஒருவர் உறுப்பினராக இருப்பார்கள்.
* ஒரு மாதத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும். இதில், தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.
* பள்ளி அங்கத்தினர் அனைவருக்கும் ‘‘ போக்சோ’’ சட்டத்தில் உள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாக்க பயிற்சி அளிக்கப்படும்.
* இணைய வழி கற்றல்- கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும்.
* ஆன்லைன் நிகழ்வுகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.
* மாணவர்கள் புகார் தெரிவிக்க பள்ளியில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்.
* மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, பள்ளியில் பெறப்பட்ட அனைத்து புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டை பராமரிக்க வேண்டும். வாய்மொழியாக பெறப்பட்ட புகார்களையும் இந்த பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
* அனைத்து பள்ளியிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதி வரை குழந்தைகளை துன்புறுத்தலை தடுக்கும் வாரம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
ஆணையர் தலைமையில் குழு
ஆன்லைன் வகுப்பு பாதுகாப்பு குழுவின் தலைவராக பள்ளிக் கல்வி ஆணையர் இருப்பார். கல்லூரிக் கல்வித்துறையின் இயக்குநர், கணினி குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை அலுவலர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய பிரிவு காவல் துறை அலுவலர், இரு கல்வியாளர்கள், இரு உளவியல் நிபுணர்கள், குழந்தைகள் இடையே பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் இருப்போர், தன்னார்வலர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இந்த குழுவில் இடம் பெறுவார்கள். ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்த குழுவினர் உருவாக்குவார்கள். அந்த நெறிமுறைகளை மேற்கண்ட பள்ளிக் கல்வி ஆணையர் ஏற்று அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைப்பார்.
source
https://www.dinamalar.com/
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE