தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் ஜூலை 3ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யலாம்.
நாளை (30.06.2021) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 1,2-ம் தேதிகளில் சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும், 3-ந்தேதி அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 5 செமீ மழையும், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE