கொரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வும் ரத்து செய்யப் பட்டு உள்ளது. அவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்கப்படலாம் என, கூறப்படுகிறது. தற்போது பிளஸ் 2 படித்து கொண்டிருப்பவர்களில், 33 ஆயிரம் பேர், 2020ல் நடந்த பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். வழக்கமாக, சில பாடங்களில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களும், பள்ளிகளிலேயே தொடர்ந்து, பிளஸ் 2 படிக்க அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு, பள்ளி அளவிலேயே தனித்தேர்வர்களாக பதிவு செய்யப்பட்டு, பிளஸ் 2 தேர்வு நடக்கும்போதே, பிளஸ் 1 பொது தேர்வின் அரியர் பாடங்களை எழுதவும் அனுமதிக்கப்படும்.
பிளஸ் 1 அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். அதுவரை, வெறும் மதிப்பெண் பட்டியல் மட்டுமே தரப்படும். அதை வைத்து கொண்டு, உயர்கல்வியில் சேர முடியாது. இந்நிலையில், 2020ல் பிளஸ் 1 முடித்து, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரியர் தேர்வு நடத்தவில்லை. எனவே, 33 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE