10, 11-ஆம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு அதற்கான மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரியை வைத்து சதவிகிதம், 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண்களை மட்டும் வைத்து) சதவிகிதம், 12-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வை வைத்து 30 சதவிகிதம் என்று மொத்த 100 சதவிகிதத்திற்கு மதிப்பெண் கணக்கிடப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
11-ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு மற்றும் 12-ஆம் வகுப்பு அக மதிப்பீடு செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31-ஆம் தேதிக்குள் அரசு தேர்வுகள் துறை இணையத்தில் வெளியிடப்படும். இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் 12-ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும்.
தேர்வு முடிவு
தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பேருந்தொற்று பரவல் சீரடைந்தவுடன் மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்துத் தக்க சமயத்தில் தேர்வு நடத்தும். இத்தேர்வுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்” எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE