கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 ச தவீத குழந்தைகளை சேர்ப்பதற்கான வ ழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்டுள்ள ஆணை:
* சிறுபான்மை தனியார் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்பில்( எல்கேஜி அல்லது 1ம் வகுப்பு) பள்ளி வாரியாக உள்ள மொத்த இடங்கள், அவற்றில் 25 சதவீத இடங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் மற்றும் கல்வி அலுவலகங்கள் மூலம் வெளியிட வேண்டும். பள்ளிகளிலும் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.
* குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வழியாக விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
* பள்ளிகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டால், அது குறித்து அந்தந்த பெற்றோருக்கு தவறாமல் ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும்.
* ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் தகவல் பலகையில் அந்த பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை குறிப்பிட்டு 24ம் தேதியில் இருந்து சேர்க்கைக்காக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். 24ம் தேதி முதல் பள்ளிகளின் மொத்த இடங்கள், நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் குறித்த விவரங்களை 30ம் தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* ஜூலை 5ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 8ம் தேதி வரை இணைய வழியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
* மேற்குறிப்பிட்ட 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுவது தொடர்பாக பள்ளி வாயிலில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பெரிய அளவில் பேனர்கள் வைக்க வேண்டும்.
* இந்த பணிகளின் போது கொரோனா தொற்று பாதுகாப்பு தொடர்பான அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் தனது வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE