நாடு முழுதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்வு கட்டாயம். இதனால், கிராமப்புற மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆலோசனை கூட்டம்
எனவே, நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய, தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இக்குழுவின் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதன்பின் நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த பேட்டி:நீட் தேர்வால், எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆவணங்களை திரட்டி வருகிறோம். முக்கியமான ஆவணங்கள் வர வேண்டி உள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து, 25 ஆயிரம் பேரிடம் இருந்து கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலும், மின்னஞ்சலில் தான் கருத்துகள் வந்து உள்ளன.பெரும்பாலானோர், நீட் தேர்வு வேண்டாம் என்றும், சிலர் நீட் தேர்வு வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.ஒரு சிலர், இரண்டு ஆண்டுகளுக்கு தேர்வு வேண்டாம் என்கின்றனர். அனைத்து தரப்பினரின் கருத்துகளும் வந்த பின், அறிக்கை இறுதி செய்யப்படும்.
அரசாணை
எங்களது குழுவினர், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பணியாற்றி வருகின்றனர். அரசாணைப்படி, ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அரசின் விதிமுறைகளை தாண்டி, எங்களது பரிந்துரைகள் இருக்காது; விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2016 முதல் படித்த அறிவியல் பிரிவு மாணவர்களின் விபரங்களை சேகரித்து, நீட் தேர்வு ஆய்வு கமிட்டிக்கு அனுப்பும்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து, பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க, நாளை கடைசி நாள். எனவே, கருத்துகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல், தபாலிலோ, neetimpact2021@gmail.com என்ற, மின்னஞ்சலிலோ அனுப்பலாம்.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE