கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு தான் இருக்கின்றன. கல்லூரிகளில் வகுப்புகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஓராண்டாக ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நடப்பு செமஸ்டருக்கான தேர்வும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட இருக்கிறது. அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் நடப்பு செமஸ்டருக்கான தேர்வு தேதியை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது
அனைத்து இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி பட்டப்படிப்புகளுக்கு ஏப்ரல்-2021 மாத செமஸ்டர் தேர்வு வருகிற 21-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வு தொடர்பான விரிவான அட்டவணை மற்றும் ஹால்டிக்கெட் குறித்த விவரங்கள் வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் www.unom.ac.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்படும். இந்த தேர்வு ஆன்லைன் வாயிலாக 3 மணி நேரம் நடைபெறும்.
source www.dailythanthi.com

source www.dailythanthi.com

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE