உலகம் முழுவதும் 168 நாடுகளில் அஸ்ட்ராசெனகா கோவிட் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிக்கும் இடையேயான கால அளவு முதலில் 4 முதல் 8 வாரங்களாக இருந்தது. கால அளவை அதிகரிப்பதனால் நோய் எதிர்ப்பாற்றல் கூடுகிறது என பல ஆய்வுகள் தெரிவித்தன. அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கும் காலவகாசம் தேவை என்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் 12 வார இடைவெளியாக அதனை நீட்டித்தன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 120 பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 18 முதல் 55 வயது வரை ஆகும். ஏற்கனவே முதல் தடுப்பூசி பெற்று பரிசோதனையில் இருந்த அவர்களுக்கு 10 மாதங்களுக்கு பிறகு 2-ம் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். முதல் தடுப்பூசி பெற்றதும் அவர்கள் உடலில் தோன்றிய நோய் எதிர்ப்பாற்றலின் அளவு 180 நாட்களுக்கு பிறகு பாதியாக குறைந்துள்ளது.
ஒரு வருடத்திற்கு பிறகு ஓரளவு எதிர்ப்பாற்றல் எஞ்சியிருந்ததாக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. 10 மாதத்திற்கு பின் இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட போது நோய் எதிர்ப்பாற்றல் சில நாட்களிலேயே நான்கு முதல் 18 மடங்கு வரை உயர்ந்ததாக கூறியுள்ளனர்.
Source
- www.dinamalar.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE