தமிழகத்தில், 10 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் வாழ்விழந்து உள்ளன. பல பள்ளிகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. மின் கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவை கட்ட வேண்டியுள்ளது.மேலும், 50 ஆயிரம் பள்ளி வாகனங்களுக்கு இருக்கை வரி, இன்சூரன்ஸ், எப்.சி., சாலை வரி உள்ளிட்டவை கட்ட வேண்டியுள்ளது.
தமிழகத்தில் 10 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகளை மூடுவது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,'' என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலர் நந்தகுமார் கூறினார்.
கொரோனா காலம் என்பதால், 2019 முதல் கல்வி கட்டணங்கள் நிலுவையில் உள்ளன. பெற்றோரிடம், 75 சதவீத கல்வி கட்டணங்களை வாங்கி கொள்ளலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும், 25 சதவீத பள்ளிகள் கூட அந்த 75 சதவீத கட்டணங்களை பெறவில்லை.
இதனால், ஐந்த லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், பணியாளர்கள் வாழ்விழந்து நிற்கின்றனர்; தற்கொலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். வாங்கிய கடனை கட்ட முடியாததால், பிரைமரி, நர்சரி பள்ளிகளை மூடி விடுவது என முடிவுஎடுத்துள்ளோம். எங்கள் பள்ளிகளையும், 50 லட்சத்துக்கும் மேலான மாணவர்களையும், அரசே எடுத்து கொள்ளட்டும். பள்ளிகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE