Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

06 May 2021

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றார்



தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றார் 









பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்கும்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு kalvitamilnadu.com வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

பள்ளி கல்வி துறை அமைச்சர்

இளைஞரணிக்கு முன்னுரிமை.. அன்பில் மகேஷை சரியான நேரத்தில்.. சரியாக களமிறக்கிய திமுக.. இதுதான் ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற அன்பில் மகேஷுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவில் இளைஞரணி துணை செயலாளராக இருக்கும் அன்பில் மகேஷுக்கு அமைச்சரவையில் அதிரடி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பொறுப்பேற்க உள்ளார். நாளை ஆளுநர் மாளிகையில் ஆடம்பரம் இல்லாமல் ஸ்டாலின் முதல்வராக பொறுபேற்க உள்ளார்.

இந்த நிலையில் ஸ்டாலினுடன் நாளை பதவி ஏற்க உள்ள 33 அமைச்சர்கள் நாளை பதவி ஏற்க உள்ளனர். இந்த 33 அமைச்சர்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இளம் திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தை சேர்ந்த அன்பில் மகேஷ் இந்த முறை திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி 49,697 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குமாரை தோற்கடித்தார்.

இந்த நிலையில் தற்போது அன்பில் மகேஷுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் திமுகவின் 100% வெற்றிக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் முக்கிய காரணமாக இருந்தார். இதனால் தற்போது பள்ளிக்கல்வித்துறையை ஸ்டாலின் அன்பிலும் பரிசளித்துள்ளார். இவர் திமுகவின் இளைஞரணி துணை செயலாளர் ஆவார்.


திருச்சியில், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், முசிறி, துறையூர் மணப்பாறை, திருவரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஆகிய 9 தொகுதிகளிலும் திமுகவே வென்றது குறிப்பிடத்தக்கது. இதில் திமுகவின் இளைஞரணி பங்கு மிக முக்கியமானது. அதிலும் கடந்த சில வருடங்களில் டெல்டா மாவட்டங்களில் திமுகவில் பல இளைஞர்கள் இணைய இவர் காரணமாக இருந்தார்.

தேர்தல் நேரத்தில் திமுகவின் வெற்றியும் இது பெரிய அளவில் எதிரொலித்து. இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு பக்கபலமாக இருந்து கட்சியை பலப்படுத்துவதில் அன்பில் முக்கிய பங்கு வகித்தார். அதற்கான வெகுமதி இப்போது அவருக்கு கிடைத்துள்ளது. திமுகவின் இளைஞரணி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதோடு கொரோனா காலம் என்பதால் மாணவர்கள் ஆன்லைன் பள்ளி, ஆன்லைன் தேர்வு என்று எல்லாம் டிஜிட்டல் ரீதியாக மாறி வருகிறது. பாடங்களும் இதற்கு ஏற்றபடி டிஜிட்டலை மையமாக வைத்து மாற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இளம் எம்எல்ஏவான அன்பில் மகேஷை திமுக தலைவர் ஸ்டாலின் களமிறக்கி உள்ளார்.

இளைஞர் என்பதாலும், பள்ளி கல்வியில் புதிய திட்டங்களை, புரட்சியை ஏற்படுத்த கூடிய துடிப்பானவர் என்பதாலும் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார். திமுக ஆட்சியில் தங்கம் தென்னரசு வசம் இருந்த அமைச்சரவையை ஸ்டாலின் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அளித்துள்ளார்அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்கத்தை சேர்ந்தா இளம் அரசியல்வாதி மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார். இவர் 2016ல் திருவெரும்பூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாரம்பரியமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் மறைந்த திமுக எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மற்றும் திமுக முன்னாள் உறுப்பினர் அன்பில் பி. தர்மலிங்கத்தின் பேரன் ஆவார். இவரது சித்தப்பா அன்பில் பெரியசாமியும் திமுக கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆவார்.

16வது சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

முழுப் பெயர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி


பிறந்த தேதி

02/05/1977

பிறந்த இடம்

திருச்சி

கட்சி பெயர்

Dravida Munetra Kazhagam

கல்வி

MCA

தொழில்

அரசியல்வாதி

தந்தை பெயர்

அன்பில் பொய்யாமொழி

தாயார் பெயர்

மாலதி

துணைவர் பெயர்

ஜனனி

துணைவர் தொழில்

.குடும்ப தலைவி

தொடர்பு

நிரந்தர முகவரி

பழைய எண்: 159, புதிய எண்: 129 அன்பு நகர், 9 வது குறுக்கு, கீரப்பட்டி, திருச்சி -620 012



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES