அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கள் துறையில் ஏதேனும் தவறு செய்தால், உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள். அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் உள்பட அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
தொகுதிக்குள் ஏதேனும் பிரச்னை இருந்தால் நேரடியாக தன்னிடம் முறையிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மேலும், தங்கள் துறையின் நியமனங்கள் மற்றும் பணி மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும். பல எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பில்லாத நிலையில், அமைச்சர்களாக இருப்போர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாத நிலையில், மிகச் சிறப்பாக செயல்பட்டு, அவர்களது அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த புள்ளி விவரங்களை நன்கு அறிந்து வைத்துக் கொள்ளவும், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்!
அமைச்சர்களின் பி.ஏ.க்கள் நியமனம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்
கட்சி பிரச்சனைகளுக்காகவோ மற்ற பிரச்சனைகளுக்காகவோ காவல்துறைக்கு யாரும் போன் செய்யவோ நேரில் செல்லவோ கூடாது
முதலமைச்சர் மு. க ஸ்டாலின் எச்சரிக்கை!
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE