play video
இந்தியாவில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி வருகிறது. இதனால், கொரோனாவை பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பல மருத்துவமனைகளில் ஏற்படும் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் மூன்றாவது அலை எப்போது ஏற்படும் என்று கூறமுடியாது. நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸின் மூல வைரஸ் எவ்வாறு பரவியதோ அதே அடிப்படையில்தான் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களும் பரவுகின்றன. ஒரு மனிதரை பாதித்து அதன் மூலம் தன்னைப் பெருக்கிக் கொண்டு அடுத்தடுத்து பரவுகின்றன. முதலில் உருவான கொரோனை வைரஸைவிட, உருமாற்றம் அடைந்த வைரஸ்கள், மக்களுக்கு அதிகமான அளவில் பரவக்கூடியதாக இருக்கிறது.
தற்போதுள்ள உருமாற்றம் அடைந்த வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் உலகம் முழுவதும் உருவாகலாம். இந்தியாவிலும் உருவாகலாம். உருமாற்றம் அடைந்த வைரஸ்களால் பரவலும் அதிகரிக்கும் என்றார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE