பள்ளி கல்வித் துறை இயக்குனர் பொறுப்பு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார். செயலாளர் தீரஜ்குமார், ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், துறை ரீதியான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நாளைக்குள் மத்திய அரசுக்கு பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்படும் போது பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்ற அமைச்சர், கொரோனா தடுப்புப் பணியில் பல ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் பணியாற்றி வருகின்றனர், பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பு குறித்து பலரும் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என விளக்கம் அளித்தார்.
ஆன்லைன் வழியான கல்விக்கு கட்டணம் தொடர்பாக புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சர், தேசிய கல்விக்கொள்கை எதுவெல்லாம் தேவை, தேவையில்லை என்பதை தெரிவித்திருக்கிறோம். மத்திய அரசிடமிருந்து பதில் கிடைக்கவில்லை., தேவையென்றால் அதுதொடர்பாக குழு அமக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளா
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE