தமிழக சட்டசபை தேர்தலில், ஐந்து முனை போட்டி இருந்தாலும், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி இடையே தான் நேரடி போட்டி இருந்தது. கூட்டணியில், பா.ஜ., முக்கிய பங்கு வகித்ததால், இந்த தேர்தலின் முடிவுகள், தேசிய அளவில் முக்கியத்துவத்தை ஏற்படுத்துவதாக அமைந்தன.ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,வுக்கு துவக்கத்தில் இருந்தே, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்து வந்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டம், சம்பள உயர்வு போன்றவற்றில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் எண்ணங்கள், அ.தி.மு.க.,வுக்கு எதிராகவே இருந்தன.எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள் பெரும்பாலும், தி.மு.க.,வுக்கே விழும் எனக் கருதப்பட்டது. அதிலும், 90 சதவீதம் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு மட்டுமே கிடைக்கும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், நேற்று காலை, முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட போது, சரிசமமான ஓட்டுகள், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு விழுந்திருந்தன. தபால் ஓட்டுகள் எண்ணும் போதே, தி.மு.க.,வுக்கு இணையாக அ.தி.மு.க.,வும், பல இடங்களில் முன்னிலை பெற்று வந்தது. தபால் ஓட்டுகள் அதிகம் விழுந்தது, அ.தி.மு.க.,வினரை ஆச்சரியமடைய செய்தது.
இதன்பின், பொதுவான வாக்காளர்களின் ஓட்டுகள், மின்னணு இயந்திரத்தில் எண்ணப்பட்ட போது தான், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுகள் குறைந்து, தி.மு.க., வேட்பாளர்கள் அதிகம் முன்னிலை பெற முடிந்தது. வழக்கத்துக்கு மாறாக, தபால் ஓட்டுகள் குறைவாக கிடைத்தது, தி.மு.க.,வினரை யோசிக்க வைத்துள்ளது.
source -www.dinamalar.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE