Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

25 May 2021

ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்றினை கண்டறியும் பணியா?

கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை, ஆசிரியர்கள் பணியாற்றவில்லை என்ற ஒரு பொதுவான குற்றச்சாட்டு கல்வி பற்றி அறியாமல் உள்ளவர்களால் அரசுக்கும் மற்றும் சமூக தளங்களிலும் வேண்டுமென்றே தவறாக திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். 

ஆனால் உண்மை நிலை அதுவல்ல என்பதை அரசும், கல்வியாளர்களும் பெற்றோரும் அறிவர்...!

கடந்த-2020 ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடர்ந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று இணையவழியாக மாணவர்களுக்கு கற்பித்தல், கணக்கெடுப்பு, மாணவர்களுக்கு அரசு வழங்கும் 14 வகையான விலையில்லா பொருட்கள் விநியோகம் போன்ற கற்பித்தல் அல்லாத அரசு வழங்கிய பிற பணிகளையும் சிறப்பாக செய்து வந்தனர். கடைசியாக இந்தாண்டு மார்ச் மாதம் நடந்த சட்டமன்ற பொதுதேர்தல் பணியை முடித்துவிட்டு அதன் பின்பும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை பள்ளிக்கு சென்று வந்தனர். 

அதில் பலருக்கும் தொற்று ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தமிழகத்தில் இறந்து உள்ளனர். பல ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கொடிய கொரோனா கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதெல்லாம் தெரியாமல் ஒரு சிலர் வேண்டுமென்றே தங்களுக்கு தேர்தலில் ஆசிரிய பேரினம் சாதகமாக இல்லாத காரணத்தால் பழிவாங்குவதற்காக தவறான செய்திகளை பொது மக்கள் மத்தியிலும் சமூகவலைதளங்களிலும் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர், ஈரோடு போன்ற சில மாவட்டங்களில் உள்ள அனைத்து வகையான ஆசிரியர்களுக்கும் வீடு வீடாக சென்று கொரோனா தொற்றினை கண்டறியும் களப்பணி வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சக்கட்டத்தில் இருக்கும் பொழுது, சமூகத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஆசிரியர் சமுதாயம் ஏற்கனவே பல நூறு ஆசிரியர்களை இழந்து வாடும் சூழ்நிலையில் சுகாதார பணிகள் குறித்த முன் அனுபவம் இல்லாத ஆசிரியர்களை சோதனை என்ற பெயரில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நேரடியாக ஒவ்வொரு வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா..?, இணை நோய் உள்ளதா... பிற மருத்துவ உபாதைகள் ஏதேனும் உள்ளதா.. ? என்று பரிசோதியுங்கள் என சுகாதார அலுவலரின் பணிகளை முன்அனுபவமில்லாத ஆசிரியர்களிடத்தில் திணிப்பது என்பது அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயலாகும். 

மேலும் ஆசிரியர்கள் சமூகத்தில் பல்வேறு இணைநோய்களுடன் , வயதானவர்களும் உள்ளனர். இது தொற்றினை அதிகப்படுத்தி தொற்று கடுமையாக பரவி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதையும் அரசின் கனிவான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். 

நேற்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னார்வலராக பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களை மட்டுமே கொண்டு வார் ரூமில் ( WAR ROOM) பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் விருப்பமில்லாது இணை நோய்களுடன் இருக்கும் ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வரவழைத்து எவ்வித பாதுகாப்பும் இன்றி களப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES