Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

07 May 2021

கொரோனா பாதிப்பு எப்போது குறையத்தொடங்கும் ? நிபுணர்கள் கருத்து

கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை உலுக்கி வருகிறது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.








கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை உலுக்கி வருகிறது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் எழுச்சி, இந்த மாதம் மத்தியில் இருந்து இறுதிக்குள் சரியத்தொடங்கும் என்று பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் நம்பிக்கையூட்டும் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்குதல் கதி கலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நம்பிக்கையூட்டும் தகவல்களை இந்திய பெண் பத்திரிகையாளர்களுடைய இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய பிரபல தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

இன்னும் ஒன்றல்லது இரு உச்சத்தை கொரோனா பாதிப்பு தொடக்கூடும். ஆனால் தற்போதுபோல மோசமாக இருக்காது. தற்போது கொரோனா உலகளவில், கடந்த ஆண்டு தாக்காத சில பகுதிகளுக்கு செல்லத்தொடங்கி இருக்கிறது. அதாவது நடுத்தர வர்க்கத்தினரிடமும் கிராமப்புறத்தினரிடமும் கொரோனா தாக்கத்தொடங்கி உள்ளது.

தடுப்பூசிகள் செயல்திறன் மிக்கவை. அவற்றை செலுத்திக்கொள்வதை அதிகரிக்க வேண்டும். கொரோனா பாதிப்பைப் பொறுத்தமட்டில் பரிசோதனைகள் வெளிப்படுத்துவதை விட அதிகமாகவே இருக்கிறது.

நாங்கள் பார்ப்பது இந்த மாத மத்தியில் இருந்து இறுதிக்குள் கொரோனா பாதிப்பு சரியத் தொடங்கி விடும்.இந்த வைரஸ் மிகவும் மோசமான காய்ச்சல் வைரஸ் போல மாறும். இது பருவக்காய்ச்சல் போல வந்து செல்லும். அது அப்படியே தங்கி விடும். நோய் எதிர்ப்புச்சக்தி மூலமும், தடுப்பூசிகளாலும் மக்கள் நோய் எதிர்ப்புச்சக்தியைப்பெறுவார்கள்.

source www.dailythanthi.com



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES