ரேசன் கார்டு
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் பொருட்களை மட்டுமே வாங்க முடியும்; கொரோனா நிவாரண நிதியை அந்தந்த ரேஷன் கடைகளில் மட்டுமே வாங்க முடியும்.
ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ளவர்கள் கொரோனா நிவாரண நிதியை பெறலாம் என்றும், பயோமெட்ரிக் மூலம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படாது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளோடு அமைச்சர் ஐ.பெரியசாமி முதல் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள். வருகின்ற 15-ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்குவது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளோடு ஆய்வு கூட்டம் நடத்தினோம்.
கூட்டுறவு துறையின் மூலமாக கொரோனா நிவாரணம் வழங்கும் பணிகளை செய்து முடிக்கப்படும். இது குறித்து துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் முழு விச்சில் செயல்பட்டு கொரோனா நிவாரண நிதியை மக்களுக்கு முழுமையாக கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.
பயோமெட்ரிக் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் நிவாரண பொருள் வழங்கும் நாட்களில் ரேஷன் கடைகளில் வழக்கம் போல் பொருட்கள் தடையின்றி வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும், ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ளவர்கள் நிவாரண நிதியை பெறலாம், நிவாரண நிதி வழங்கும் போது கட்சியினர் தலையீடு இருக்காது என கூறினார்.
கொரோனா நிவாரண நிதி ரூ.2000 ஒரு ரேஷன் கடைகளில் ஒரு நாளில் 200 பேருக்கு வழங்கப்படும் என்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் பொருட்களை மட்டுமே வாங்க முடியும்; கொரோனா நிவாரண நிதியை அந்தந்த ரேஷன் கடைகளில் மட்டுமே வாங்க முடியும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE