இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்கொள்ள நிவாரண உதவி அறிவித்த சாம்சங்
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கொரோனா தொற்றை எதிர்கொள்ள நிவாரண நிதி வழங்க சாம்சங் முடிவு செய்துள்ளது.
சாம்சங்
தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்தியா கொரோனா தொற்றை எதிர்கொள்ள 50 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 கோடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த தொகை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்க சாம்ங் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்த பின் இதுபற்றிய முடிவுகள் எட்டப்பட்டதாக சாம்சங் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. அறிவிக்கப்பட்ட தொகையில் 30 லட்சம் டாலர்கள் மத்திய அரசு, உததிர பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டிற்கு வழங்கப்பட இருக்கிறது.
மீதமுள்ள 20 லட்சம் டாலர்களை மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவைகளாக வழங்குவதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது. இத்துடன் சாம்சங் நிறுவனம் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக ஊழியர்களுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளது.
source -
www.maalaimalar.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE