கோவை:தமிழகத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கான அறிக்கையை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் முன்பு, பள்ளிகளின் யோசனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
சி.பி.எஸ்.இ., எனும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு, நாடு முழுவதும் ஒரே நாளில், பொதுத்தேர்வு நடத்தி, ரிசல்ட் வெளியிடுவது வழக்கம்.கொரோனா தொற்று காரணமாக, அந்தந்த மாநிலங்களின் பாதிப்புக்கு ஏற்ப, தேர்வு நடத்துவதற்கான முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக, மாநில வாரியாக, தங்களின் கருத்துகளை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சில பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்த வேண்டுமெனவும், வேறு சில பள்ளிகள் தேர்வை ரத்து செய்ய வேண்டுமெனவும், இன்னும் சில பள்ளிகள் பிரதான பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழகத்தில், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், அதிகாரிகள் குழு, அறிக்கை தயாரித்து, முதல்வரின் ஒப்புதலுக்கு சமர்ப்பித்துள்ளது. இன்று, மத்திய அரசிடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கோவையில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பில், கட்டாயம் பொதுத்தேர்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.குறிப்பாக, தொற்று குறைந்ததும் ஆக., மாதத்திற்கு மேல், தேர்வு நடத்த வேண்டுமெனவும், அதற்குள் பள்ளி மாணவர்களுக்கு, தடுப்பூசி போடும் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமெனவும், பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும் பிளஸ் 2 மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தேர்வு மையங்கள் பிரிப்பது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக, அந்தந்த பள்ளிகளை தேர்வு மையமாக அறிவித்து, பொதுத்தேர்வு நடத்த வேண்டும். தொற்று குறைந்த பிறகே, தேர்வு அட்டவணை வெளியிட வேண்டும். முக்கிய பாடங்களுக்கு மட்டும், 80 மதிப்பெண்களுக்கான தேர்வாக நடத்தலாம்.
ஆன்லைன் தேர்வு மூலம், 'இன்டர்னல்' மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன. தேர்வின்றி இம்மாணவர்களின் கல்வித்தரம் அறிவது கடினம். வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கி, கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும்.-நவமணி தலைவர், கோயமுத்துார் சகோதய பள்ளிகள் சங்கம்.அரசின் அறிவிப்பை பின்பற்ற தயார்பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து, அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை பின்பற்றி, பள்ளி நிர்வாகி என்ற முறையில், முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம். ஏனெனில், சிலபஸ் முடித்து, மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளை நடத்தி வருகிறோம். மாணவர்கள் தேர்வுக்கு முழுமையாக தயாராகி உள்ளனர். ஆசிரியர்களும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து வருகின்றனர். எந்த முறையில் தேர்வு நடத்தினாலும், பின்பற்ற தயாராக உள்ளோம்.- மணிமேகலை நிர்வாக அறங்காலவர், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளிகள்.விர்ச்சுவல் தேர்வுக்கு ஓகே!சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பொருத்தவரை, 98 சதவீதம் ஆன்லைன் வகுப்புகள் முறையாக நடத்துகின்றன.
சிலபஸ் முடித்து, தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறோம். மொபைல்போன், லேப்டாப் என எந்த மின்னணு சாதனமாக இருந்தாலும், எவ்வளவு அடி தொலைவில் வைக்க வேண்டும், மாணவர்கள் தேர்வு எழுதி, சமர்ப்பிக்கும் முறை என அனைத்தும், கற்று தரப்பட்டுள்ளது. தேர்வின் போது மாணவர்களின் நடவடிக்கைகள், வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது.
10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், கண்காணிப்பாளராக நியமித்து தான், பள்ளி அளவிலான தேர்வுகளை நடத்தி வருகிறோம். இதையே, பொதுத்தேர்வுக்கும் பின்பற்றலாம். தொழில்நுட்ப வசதி இருப்பதால், விர்ச்சுவல் முறையில் பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல் இருக்காது.-தர்மகண்ணன் தாளாளர், ஆர்.கே.வி., சீனியர் செகண்டரி பள்ளி
source www.dinamalar.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE