மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவு எடுக்குமாறு முதல்-அமைச்சர் அறிவுறித்தி உள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 10-ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி கருத்து கேட்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்காலம் என்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகவும் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவு எடுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தி உள்ளார்.
மற்ற மாநிலங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் மதிப்பெண் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலோசனை முடிவுகளை முதல்வரிடம் தெரிவித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE