முன்னதாக இன்று மாலை 5 மணி வரை மட்டுமே தேர்தல் பரப்புரை செய்ய அனுமத்தி வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் கூடுதலாக 2 மணி நேரம் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இதனால், இன்று இரவு 7 மணியுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது. தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் இன்று மாலையுடன் தங்களுக்கு சம்பந்தமில்லாத தொகுதியை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனி தேர்தல் வாக்கு பதிவு முடியும் வரையில் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்ய தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது.
குறிப்பாக வாட்ஸ்-அப் குரூப் அட்மின்கள் உஷாராக இருங்கள். உங்களது வாட்ஸ்-அப் குரூப்பில் எந்தவொரு அரசியல் கட்சிக்கோ, வேட்பாளருக்கோ இனி வாக்களிக்குமாறு குழுவில் யார் பிரச்சாரம் செய்தாலும் அது உங்களையும் பாதிக்கும். இதற்கு சிறை தண்டனை வரையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், எச்சரிக்கையாக இருங்கள். இன்னும் சொல்லப் போனால், உங்களது வாட்ஸ்-அப் குரூப் செட்டிங்ஸ் சென்று, குழுவின் அட்மின் மட்டுமே குழுவில் பதிவு செய்ய முடியுமாறு வாக்குப்பதிவு நிறைவடையும் வரையில் மாற்றிக் கொள்ளுங்கள். ஆர்வக்கோளாறு காரணமாக யாராவது ஏதாவது போஸ்ட் போட்டால், தேவையற்ற சிக்கலை உருவாக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE