ஜான்சான் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகமை நீக்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வீரியமடைந்து வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. எனினும் பிற கொரோனா தடுப்பு ஊசிகளை போன்று இதனை இரண்டு முறை செலுத்த தேவையில்லை. ஒரு முறை செலுத்தினாலே போதுமானதாகும்.
இந்நிலையில்,ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கு ரத்தம் உறைவு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
தற்போது, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(சி.டி.சி) மற்றும் உணவு மற்றும் மருந்து வாரியம் நீக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை செலுத்துவதால் ரத்தம் உறையும் ஆபத்து ஏற்படுவது என்பது மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 15 பேருக்கு மட்டுமே ரத்தம் உறைதல் ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 10 லட்சம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 7 பேருக்கு மட்டுமே ரத்தம் உறைதல் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
50 வயதை கடந்த பெண்கள் மற்றும் அனைத்து வயது ஆண்டுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 10 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே ரத்தம் உறைதல் அறிகுறி காணப்பட்டதாகவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி தொடர்பாக விசாரணை நடத்திய ஐரோப்பிய மருத்துவ முகமைகளும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் ஏற்படும் அபாயத்தை விட பலன்கள் அதிகமாக இருப்பதாக அண்மையில் தெரிவித்துள்ளன.
source https://tamil.news18.com/ via kalvitamilnadu.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE