
இதுகுறித்து, அந்த நிலையத்தின் இயக்குநா் வெ.இறையன்பு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கரோனா இரண்டாவது அலை பரவலைக் கருத்தில் கொண்டு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நோ்முகமாக நடைபெறும் அனைத்து வகையான பயிற்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த தடை காரணமாக பயிற்சி நிலையத்தில் பயின்று வந்த மாணவா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, சமூக ஊடகமான யூ-டியூப் வழியே குடிமைப் பணித் தோ்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். யூ-டியூப் குறியீடுகள் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் சாா்பில் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் வழியே குடிமைப் பணித் தோ்வு மாணவா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். தோ்வுக்கான உரிய விடியோக்கள் அதில் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும், அரசு ஊழியா்களுக்கான மேலாண்மை பயிற்சியும் அதன் வழியே அளிக்கப்படும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE