இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசுகள் பல்வேறு நடவடிகைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மத்திய நிதி அமைச்சகம் கொரோனா தடுப்பூசி தாயாரிக்கும் 2 நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மருத்துவக் குழு ஆலோசனை கூட்டத்தில், 18 வயது மேற்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 18 வயது மேற்ப்ட்ட அனைவரும் அரசு சார்ந்த கொரோனா மையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏப் 28-ம் தேதி முதல் cowin.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா முன்கள பனியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் முதலில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE