தமிழ் திரைப்பட நடிகர் தாமு, சர்வதேச பெற்றோர் ஆசிரியர் மாணவர் பேரவை என்ற அமைப்பை துவங்கி, கல்வி சேவைகளை வழங்கி வருகிறார். தமிழக இளைஞர்களின் நலனுக்காக, ஒரு லட்சம் பேராசிரியர்கள், 30 லட்சம் பெற்றோர் மற்றும், 20 லட்சம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
நடிகர் தாமுவின் இச்சேவையை பாராட்டி, கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், 'ராஷ்டிரிய சிக் ஷா கவுரவ் புரஸ்கார்' விருது வழங்கப்பட்டு உள்ளது.
கல்வி வளர்ச்சி கவுன்சில் தேசிய தலைவர் குன்வர் சேகர், ஏ.ஐ.சி.டி.இ., ஆலோசகர் பேராசிரியர் ஹரிஹரன், பிரஸ்டீஜ் பல்கலை அதிபர் டேவிட் ஜெயின், அருணாச்சல் யுனிவர்சிட்டி ஆப் ஸ்டடீஸ் தலைவர் அஸ்வானி லோகன் ஆகியோர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
source : pawww.dinamalar.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE