கோவிட் -19 தடுப்பூசி மையங்களை காட்டும் கூகுள் மேப்
தென்னிந்தியாவை காட்டிலும் வடஇந்தியாவில் தொற்று கடுமையான உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவின் முதல் அலையை விட மின்னல் வேகத்தில் பரவி வருகிறது தொற்றின் இரண்டாம் அலை. நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் நாட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு சுமார் 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் சமீப நாட்களாக தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தென்னிந்தியாவைக் காட்டிலும் வடஇந்தியாவில் தொற்று கடுமையான உயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் இல்லாத நிலையிலும் கொரோனா பரவிவருவது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் இயல்பாகவே மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள கோவிட்-19 பரிசோதனையை செய்து கொள்ள ஈடுபாடு காட்டி வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக மக்கள் கூட்டம் காரணமாக தற்போதுள்ள பல பரிசோதனை மையங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் சோதனை செய்து கொள்ள அல்லது தடுப்பூசி போட்டு கொள்வதில் மக்களுக்கும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தொற்று பாதிப்பு பற்றி சரியான தகவல்களை மக்களிடம் கொண்டும் சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே மக்களுக்கான சிரமத்தை போக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் கூகுள் மேப்ஸ் போன்ற App-களை பயன்படுத்தி COVID-19 பரிசோதனை மையங்கள் அல்லது அவர்களைச் சுற்றியுள்ள கொரோனா தடுப்பூசி மையங்களைக் கண்டறியலாம். மேப் App-ல் மையங்களின் தொலைபேசி எண்கள் மற்றும் அவை செயல்படும் நேரங்கள் போன்ற கூடுதல் தகவல்களும் உள்ளன. இதற்கென கூகுள் மேப்பில் கோவிட் -19 தகவல் மற்றும் தடுப்பூசி இடங்கள் (Covid-19 info and vaccine locations) என்ற விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை கிளிக் செய்தால் Near by resources என்ற தலைப்பில் கோவிட் -19 சோதனை(Covid-19 Testing) மற்றும் கோவிட் -19 தடுப்பூசிகள்(Covid-19 Vaccines) என்ற விருப்பங்கள் காட்டப்படுகிறது. மக்கள் தங்கள் அருகிலுள்ள கோவிட் -19 பரிசோதனை மையங்களுக்கு செல்ல விரும்பினால் Covid-19 Testing-ஐ கிளிக் செய்தால் அவர்களுக்கு அருகிலுள்ள பரிசோதனை மையங்கள் தொலைபேசி எண் மற்றும் முகவரியுடன் தோன்றும். தடுப்பூசி எடுத்து கொள்ள விரும்புவோர் Covid-19 Vaccines-ஐ கிளிக் செய்தால் அருகிலுள்ள தடுப்பூசி போடும் மையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தோன்றுகிறது. இது தவிர யூசர்கள் தங்களுக்கு தேவையான முடிவுகளை பெற COVID 19 சோதனை” அல்லது “கோவிட் சோதனை” போன்ற முக்கிய வார்த்தைகளையும் பயன்படுத்தலாம்.
IOS மற்றும் Android யூசர்கள் மேப்பில் நேரடியாக அல்லது ஒரு பட்டியல் வழியாக தகவல்களைக் காணலாம். லேப் வீட்டு சோதனையை (home testing) வழங்குகிறதா என்பதைச் சரிபார்க்க, யூசர்கள் தொலைபேசி அழைப்பின் மூலம் நேரடியாக சென்டர்களை தொடர்பு கொண்டு கேட்கலாம். COVID-19 சோதனை மையம்-தேடல் அம்சம் கடந்த ஜூன் 2020 -ல் சேர்க்கப்பட்டது. ஆனால் COVID-19 தடுப்பூசி மையத்தைக் கண்டறிய அனுமதிக்கும் அம்சம் சமீபத்தில் தான் கூகுள் மேப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற யூசர்கள் குறிப்பிட்ட மருத்துவமனையில் ஸ்லாட் கிடைப்பதை சரிபார்த்து கொண்டு பின் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடலாம்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE