உலகம் முழுவதும் பெரும்பாலான செல்போன் பயனர்கள் தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் செயலி இல்லாத செல்போனே இல்லை எனலாம். அந்த அளவிற்கு வாட்ஸ் அப் செயலி மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப் பயனர்களிடையே இந்த செயலி பற்றிய ஒரு புதிய வதந்தி பரவி வருகிறது. அதாவது பிங்க் நிறத்தில் புதியதாக வாட்ஸ்அப் அறிமுகம் ஆகியுள்ளதாகவும், இந்த செயலி பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதாகவும் செய்தி கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் குரூப்புகளில் வலம் வந்துகொண்டுள்ளது. ஆனால் இதுபற்றி வாட்ஸ்அப் நிறுவனம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் இதுபற்றி பேசிய சைபர் க்ரைம் செக்யூரிட்டி போலிஸ் ராஜஹாரியா, பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியின் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதுபற்றி பேசிய சைபர் க்ரைம் போலிசார் இந்த செயலியை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்றும் ந்ச்சரிட்த்துள்ளனர். இதன்மூலம் செல்போன் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்ட இந்த பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியானது மிகவும் ஆபத்தானது என்பதும், இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்தால் செல்போனில் உள்ள அனைத்து தகவல்களும் ஹேக் செய்யப்படும் என்பதும் தெரியவந்துள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE