Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

22 April 2021

தபால் வாக்குகளை ஆசிரியர்கள் உடனடியாக செலுத்த ஜாக்டோ ஜியோ வேண்டுகோள்

தபால் வாக்குகளை பதிவு செய்து - அஞ்சலகங்களில் செலுத்த ஜாக்டோ ஜியோ வேண்டுகோள் 

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செ. பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:


கடந்த 3-ம் தேதி நடைபெற்ற 3-ம் கட்ட பயிற்சி வகுப்பில் 16 சதவீதம் பேர் மட்டுமே தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இத்துடன் ஒட்டுமொத்தமாக 47 சதவீதம் தபால் வாக்குகள் தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்ற இடங்களில் வாக்குப் பெட்டிகளில் போடப்பட்டிருக்கிறது.

மேலும், 15 சதவீதம் பேர் தேர்தலுக்கு முன்பாக இடைப்பட்ட கால கட்டங்களில் அஞ்சலகம் மூலம் தபால் வாக்கு செலுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனால் தற்போதுவரை ஒட்டு மொத்தமாக 62 சதவீதம் பேர் மட்டுமே தபால் வாக்களித்துள்ளனர்.

 கடந்த 3-ம் தேதி தபால் வாக்குக்கு விண்ணப்பித்த தகுதியான அனைவருக்கும் அஞ்சலகம் மூலம் தபால் வாக்கு செலுத்துவதற்கான கவர் அனுப்பப்பட்டுள்ளது. தபால் வாக்கு அனைத்து ஆசிரியர்களுக்கும் தபால்காரர் கள் மூலம் கிடைத்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட த்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு தற்போதுதான் கவர் கிடைத்து வருகிறது.

தற்போது தபால் வாக்கு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தங்களுடைய தபால் வாக்கினை கவனமாக பதிவு செய்து அஞ்சலகம் மூலமாகத் தான் அனுப்ப வேண்டும். 

தாலுகா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்டி கிடை யாது. கடந்த சட்டப் பேரவை தேர்தலில் ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் அதாவது தாலுகா அலுவலகத்தில் தனித்தனியாக அந்தந்த தொகுதிக்கான ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தபால் வாக்கு சேகரிப்பதற்கான வாக்குப்பெட்டி காவல்துறை கண்காணிப்புடன் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், இம்முறை அப்படி பெட்டிகள் வைக்கப்படவில்லை.

எனவே, உடனடியாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்கள் வாக்கினை சரியான முறையில் பதிவு செய்து உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று உடனடியாக அஞ்சலகம் மூலம் அனுப்ப வேண்டும்.







No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES